‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
அக்டோபர் 2ம் தேதி வெளிவர உள்ள பேங் பேங் படம் பற்றிய செய்திகள் பல வெளிந்து, அந்த படம் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் பாடல் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் பேங் பேங் படத்தின் ஹீரோ ஹிருத்திக்கும், ஹீரோயின் கத்ரீனாவும் இணைந்து நடனமாடினர்.
சித்தார்த் ஆனந்த் தயாரித்துள்ள ரொமான்ஸ், ஆக்ஷன் கலந்த பேங் பேங் படத்தில் மட்டுமல்லாது இந்த விழாவிலும் ஹிருத்திக்கின் நடன அசைவுகளுக்கு ஈடுகொடுத்து கத்ரீனாவும் ஆடி, ரசிகர்களையும் ஆட்டம் போட வைத்துள்ளார். இது பற்றி சித்தார்த் கூறுகையில், இந்த பாடல் ரசிகர்களை அதிகம் கவரும் என நாங்கள் எதிர்பார்த்தது போலவே இந்த பாடல் வந்துள்ளது. இந்த படத்தில் மிக அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளதும் இந்த பாடல் தான் என்றார்.
டான்ஸ் பற்றிய படமான பேங் பேங் பற்றி இவ்விழாவில் பேசிய ஹிருத்திக், மைக்கேல் ஜாக்சனை முன்மாதிரியாக மனதில் நினைத்துக் கொண்டு தான் இந்த படத்தில் நடன அசைவுகளை செய்தேன். இதற்காக மைக்கேல் ஜாக்சனின் பல பாடல்களை திரும்ப திரும்ப போட்டுப் பார்த்தேன். அவரது ஸ்டைலும், எனர்ஜியும் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த படத்தில் மைக்கேல் ஜாக்சன் போன்று தத்ரூபமாக நடனமாட வேண்டும் என சித்தார்த்தும், பாஸ்கோடும் என்னிடம் கூறினார்கள். ஆனால், அவரை போன்று என்னால் நடனம் ஆட முடியாது என்றே முதலில் தோன்றியது. ஆனால் கிட்டதட்ட அதற்கு இணையாக இருப்பதாக என்னால் முடிந்த முயற்சிகளை செய்தேன். அவரது நடன அசைவுகளை உள்வாங்கி அதனை எனது ஸ்டைலில் அளித்துள்ளேன் அதனால் பயமில்லை. அது நிச்சயம் எனது ரசிகர்களை கவரும்.
பேங் பேங் படத்தின் டைட்டில் பாடல் தான் எனக்கு மேற்கொண்டு சிறப்பாக செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தியது. இது பாடல் வெளியீட்டு விழா மட்டுமல்ல, டான்ஸ் பார்ட்டியும் கூட தான். இந்த பாடலில் கத்ரீனாவும் என்னுடன் அழகாக நடனமாடி உள்ளார் என்றார்.
பேங் பேங் படத்தில் இது சிறந்த பாடல் என கூறிய கத்ரீனா, இந்த பாடல் என்னை மிகவும் கவர்ந்து விட்டது. நடனம் ஆடுவதற்கு மிக சிறந்த பாடல் இது. விஷால்-ஷேகர் மற்றும் சித்தார்த் இதற்காக சிறப்பாக பணியாற்றி உள்ளனர். இந்த வீடியோவில் மைக்கேல் ஜாக்சனின் பல நடன அசைவுகளை ஹிருத்திக் செய்துள்ளார். பாஸ்கோவும், சீசரும் மிக அழகாக இந்த பாடலை படமாக்கி உள்ளனர் என தெரிவித்துள்ளார்.